டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்..! சூப்பர் ஆல்ரவுண்டருக்கு அணியில் இடம்

By karthikeyan VFirst Published Oct 13, 2021, 7:00 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் 17ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்திய அணி வரும் 24ம் தேதி, முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி செப்டம்பர் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக அணியில் எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா ஃபிட்னெஸ் பிரச்னையால் பவுலிங் போட முடியாத சூழல் உள்ளது. ஐபிஎல்லிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் பந்துவீசவில்லை. ஆல்ரவுண்டராக எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

இந்நிலையில், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்டிருந்த ஷர்துல் தாகூர் மெயின் அணியில் எடுக்கப்பட்டதால், மெயின் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ரிசர்வ் வீரராக மாற்றப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான மாற்றம் செய்யப்பட்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

ரிசர்வ் வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்ஸர் படேல்.
 

click me!