இதெல்லாம் தேவையில்லாத ஆணி.. பிக்பேஷ் லீக் புதிய விதிகளை விளாசிய ஷேன் வாட்சன்

By karthikeyan VFirst Published Nov 17, 2020, 4:16 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் அறிமுகம் செய்யப்படும் 3 விதிகளை தேவையில்லாத ஆணி என்கிற ரீதியில் விமர்சித்துள்ளார் ஷேன் வாட்சன்.
 

பிக்பேஷ் லீக்கில் அறிமுகம் செய்யப்படும் 3 விதிகளை தேவையில்லாத ஆணி என்கிற ரீதியில் விமர்சித்துள்ளார் ஷேன் வாட்சன்.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் இந்த சீசன் வரும் டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. தொடர் தொடங்கவுள்ள நிலையில், 3 புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பவர்சர்ஜ்(பவர்ப்ளே தொடர்பான விதி), X Factor Player மற்றும் பேஷ் பூஸ்ட் ஆகிய 3 விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த விதிகளை டேரன் லேமன் உள்ளிட்ட சிலர் வரவேற்றாலும், இவையெல்லாம் தேவையில்லாதவை என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிகள் குறித்த தனது கருத்தை தெரிவித்த வாட்சன், பிக்பேஷ் லீக் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. பவர்சர்ஜ், X Factor Player மற்றும் பேஷ் பூஸ்ட் ஆகிய, பிக்பேஷ் லீக்கிற்கு புத்துயிரூட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிகள் தவறான வழிகாட்டுதல்கள் ஆகும். உடையாத சக்கரத்தை மறு உருவாக்கம் செய்யும் வேலை இது என்று வாட்சன் விமர்சித்துள்ளார்.
 

click me!