இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்ஸர்..! பிசிசிஐ அறிவிப்பு

Published : Nov 17, 2020, 02:06 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்ஸர்..! பிசிசிஐ அறிவிப்பு

சுருக்கம்

இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கிட் ஸ்பான்ஸராக 2016லிருந்து இருந்துவந்த நைக் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய கிட் ஸ்பான்ஸராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய தொடரிலிருந்து 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான 3 ஆண்டுகளுக்கு எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கிட் ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்யும் உரிமையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?