அவங்களோட வரலாறு தெரிஞ்சுமா அசால்ட்டா நெனச்சீங்க.. உலக கோப்பையில் தெறிக்கவிட போறாங்க.. முன்னாள் ஜாம்பவான் அதிரடி

By karthikeyan VFirst Published May 27, 2019, 2:36 PM IST
Highlights

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 
 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணி ஆகியவை சிறந்த அணிகளாக திகழ்கின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு எழுச்சி கண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் மீதே அனைவரின் கவனமும் இருக்கிறது. இந்த 2 அணிகளில் ஒன்று தான் கோப்பையை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், ஸ்மித்தும் வார்னரும் வந்தபிறகு ஆஸ்திரேலிய அணி கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. 

பயிற்சி போட்டியில் கூட இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஸ்மித் அதிரடியாக ஆடி சதமடித்தார். வார்னரும் ஐபிஎல்லில் அபாரமாக ஆடிய டச்சில் இருக்கிறார். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசிய ஷேன் வார்னே, இந்தியா - இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. சமீபகாலமாக இரு அணிகளும் அபாரமாக ஆடிவருகின்றன. ஆனால் சற்று வரலாற்றை திரும்பி பார்த்தால் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தெரியும். கடைசி 6 உலக கோப்பை தொடர்களில் 4 முறை ஆஸ்திரேலிய அணிதான் கோப்பையை வென்றது. உலக கோப்பையில் ஆடுவது ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சியான ஒன்று. ஆஸ்திரேலிய அணியால் இந்த முறை கோப்பையை வெல்ல முடியும்; வென்றும் காட்டுவார்கள். ஸ்மித்தும் வார்னரும் வந்த பிறகு ஆஸ்திரேலிய அணி எழுச்சி கண்டுள்ளது என்று ஷேன் வார்னே தெரிவித்தார். 
 

click me!