மறுபடியும் வார்னரை தட்டி தூக்கிய ஷமி.. ஆரம்பத்துலயே விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

Published : Jan 19, 2020, 02:13 PM ISTUpdated : Jan 19, 2020, 02:15 PM IST
மறுபடியும் வார்னரை தட்டி தூக்கிய ஷமி.. ஆரம்பத்துலயே விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

சுருக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் வார்னரின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்திவிட்டார் ஷமி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது. 

ஆஸ்திரேலிய அணி கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக ஹேசில்வுட்டை அணியில் சேர்த்துள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு சின்னசாமி ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் ஆட வார்னரும் ஃபின்ச்சும் களத்திற்கு வந்தனர். 

Also Read - காலுலயே கரெக்ட்டா ரன் அவுட் செய்த மோரிஸ்.. செம வீடியோ

கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் தனது இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் வார்னரை ஷமி வீழ்த்திவிட்டார். இரண்டாவது போட்டியிலும் ஷமியின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில்தான் வார்னர் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடி சதமடித்த வார்னரை, கடந்த போட்டியிலும் இந்த போட்டியிலும் சோபிக்க விடாமல், ஆரம்பத்திலேயே ஷமி அனுப்பிவிட்டார்.

வெறும் 3 ரன்களில் வார்னர் அவுட்டாக, நான்காவது ஓவரிலேயே ஸ்மித் களத்திற்கு வந்துவிட்டார். ஸ்மித்தும் ஃபின்ச்சும் இணைந்து ஆடிவருகின்றனர். பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு ஆடுகளத்தில் வார்னரை நீண்டநேரம் நிலைத்து பெரிய இன்னிங்ஸ் ஆடவிட்டிருந்தால், மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருப்பார். நல்ல வேளையாக இந்த முறையும் அவரை தொடக்கத்திலேயே ஷமி வீழ்த்திவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!