தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published Jan 19, 2020, 1:30 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. 

தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஆடுகளமும், முதல் 2 போட்டிகள் நடந்த ஆடுகளத்தை போல பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2வது போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் இந்திய அணி களம் காண்கிறது. 

ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, நவ்தீப் சைனி, பும்ரா.

ஆஸ்திரேலிய அணி:

வார்னர், ஃபின்ச்(கேப்டன்), ஸ்மித், லபுஷேன், அஷ்டன் டர்னர்ன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா. 
 

click me!