டாப் ஃபார்மில் ஸ்டம்ப்புகளை கழட்டி எறிந்த பும்ரா, ஷமி.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 16, 2020, 12:18 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து வென்றது. 

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பவுலிங் சரியில்லாததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய ஷமி, டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக, அவரது உடற்தகுதியை கருத்தில் கொண்டு, கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் இல்லாததால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் அந்த முமெண்ட்டத்தை இழந்தது இந்திய அணி. ஒருநாள் தொடரில் தோல்வியையும் தழுவியது. 

அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பும்ராவும் ஷமியும் அபாரமாக பந்துவீசியது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. 

3 நாட்கள் பயிற்சி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து லெவன் அணி வெறும் 235 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

நியூசிலாந்து லெவன் அணியை 235 ரன்களுக்கே இந்திய பவுலர்கள் சுருட்டினர். பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகிய நால்வருமே அபாரமாக வீசினர். ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் பும்ரா, சைனி, உமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

Also Read - ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்த இந்திய வீரர்.. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இணைகிறார்

விக்கெட்டுகள் ஒருபுறமிருக்க, பும்ரா மற்றும் ஷமியின் பவுலிங் அபாரமாக இருந்தது. ஃபின் ஆலன் என்ற வீரரை அருமையான இன்ஸ்விங்கின் மூலம் கிளீன் போல்டு செய்தார் பும்ரா. அந்த பவுலிங்கை பார்க்கவே பெருமகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல ஜிம்மி நீஷமை ஷமி இன்ஸ்விங்கின் மூலம் போல்டாக்கியதும் பார்க்க அருமையாக இருந்தது. வழக்கம்போலவே பந்தின் சீமை பயன்படுத்தி வீசிய ஷமி, அருமையான இன்ஸ்விங்கின் மூலம் நீஷமை போல்டாக்கினார். 

pic.twitter.com/PbL3drJOaR

— Sports Freak (@SPOVDO)

Bumrah back in action.. Class is permanent..
🎥: pic.twitter.com/OKbuL9Kuf8

— Rohit Sharma™ (@Ro45FC_)

டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பும்ராவும் ஷமியும் ரிதத்தை பிடித்து நல்ல ஃபார்மில் அருமையாக வீசியது அணி நிர்வாகத்திற்கு பேரானந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!