ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்த இந்திய வீரர்.. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இணைகிறார்

By karthikeyan VFirst Published Feb 16, 2020, 12:04 PM IST
Highlights

காயம் குணமடைந்து ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்த இஷாந்த் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணைகிறார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து வென்றது. 

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பவுலிங் சரியில்லாததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய ஷமி, டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக, அவரது உடற்தகுதியை கருத்தில் கொண்டு, கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் இல்லாததால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் அந்த முமெண்ட்டத்தை இழந்தது இந்திய அணி. ஒருநாள் தொடரில் தோல்வியையும் தழுவியது. 

அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பும்ராவும் ஷமியும் அபாரமாக பந்துவீசியது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. 

3 நாட்கள் பயிற்சி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து லெவன் அணி வெறும் 235 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

நியூசிலாந்து லெவன் அணியை 235 ரன்களுக்கே இந்திய பவுலர்கள் சுருட்டினர். பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகிய நால்வருமே அபாரமாக வீசினர். ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் பும்ரா, சைனி, உமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

விக்கெட்டுகள் ஒருபுறமிருக்க, பும்ரா மற்றும் ஷமியின் பவுலிங் அபாரமாக இருந்தது. அவர்கள் இருவரும் நல்ல ரிதமில் அருமையாக வீசியதால் இந்திய அணி நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தது. இந்நிலையில், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக இஷாந்த் சர்மாவும் இந்திய அணியில் இணையவுள்ளார். 

அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா, கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டுவந்தார். ஆனால் அவரது காயம் குணமடைந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். இந்த தொடருக்கு முன்பாக ஃபிட்னெஸை நிரூபிக்க வேண்டும் என்ற கண்டிஷனின் பெயரில் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். 

Also Read - அஷ்வினை தூக்கிட்டு போய் விரலை வெட்டுவோம்னு மிரட்டிய எதிரணியினர்.. சினிமா பாணியில் நடந்த உண்மை சம்பவம்

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள என்சிஏவில் இஷாந்த் சர்மாவின் உடற்தகுதி பரிசோதிக்கப்பட்டது. அதில் இஷாந்த் சர்மா தேர்ச்சியடைந்துவிட்டதால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக நியூசிலாந்து செல்லவுள்ளார். பும்ராவும் ஷமியும் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், இஷாந்த் சர்மாவும் அணியில் இணைவது அணிக்கு கூடுதல் பலம். 
 

click me!