அஷ்வினை தூக்கிட்டு போய் விரலை வெட்டுவோம்னு மிரட்டிய எதிரணியினர்.. சினிமா பாணியில் நடந்த உண்மை சம்பவம்

By karthikeyan VFirst Published Feb 16, 2020, 10:46 AM IST
Highlights

இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான அஷ்வின், தனது சிறுவயதில் சென்னையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார். 

இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அஷ்வின். ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும், டெஸ்ட் அணியின் நட்சத்திர ஸ்பின்னராக அஷ்வின் ஜொலிக்கிறார். அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். 

2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அஷ்வின், இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளிலும் 111 ஒருநாள் போட்டிகளிலும் 46 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் ஆடவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்தில் உள்ளார் அஷ்வின். இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஷ்வின், தனது சிறுவயதில் சென்னையில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதுகுறித்து பேசிய அஷ்வின், எனக்கு ஒரு 14-15 வயது இருக்கும். சென்னையில் நடந்த உள்ளூர் தொடர் ஒன்றில் எங்கள் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. இறுதி போட்டிக்கு நான் கிளம்புவதற்கு முன் அருகில் ஒரு இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது, 4-5 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் நல்ல உடற்கட்டை கொண்ட சிலர் வந்து, என்னை அழைத்தனர். நீங்கள் யார் என்று நான் கேட்டேன். 

நீ, அந்த இறுதி போட்டியில் ஆடப்போகிறவன் தானே என்று கேட்டு, என்னை அங்கு அழைத்து செல்லத்தான் வந்திருப்பதாக கூறினர். ஆஹா.. நம்மை அழைக்க ராயல் என்ஃபீல்டெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறதே என்று நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஒரு பைக்கில் நான் ஏறி உட்கார, எனக்கு பின்னால் ஒருவர் ஏறி உட்கார்ந்தார். ஒரு டீக்கடையில் கொண்டு நிறுத்தி என்னை உட்காரவைத்து, டீ, பஜ்ஜி, வடையெல்லாம் வாங்கிக்கொடுத்தனர். 

Also Read - டெஸ்ட் அணியில் தொடக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்த இளம் வீரர்.. நீயா நானா போட்டியில் வென்ற வீரர்

நானும் அதையெல்லாம் சாப்பிட்டேன். மணி 4-4.30 ஆகிவிட்டது. உடனே, மேட்ச் தொடங்கப்போகுது வாங்க போகலாம் என்று அவர்களை கூப்பிட்டேன். அப்புறம் தான் எனக்கு உண்மையே தெரிந்தது. தம்பி, உனக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கோம் என்று கூறிய அவர்கள், அந்த போட்டியில் நீ ஆடக்கூடாது என்பதற்காக உன்னை தடுக்கத்தான் வந்தோம்.. நாங்கள் எதிரணியை சேர்ந்தவர்கள். அதனால் இங்கிருந்து போகவேண்டும் என நினைக்காதே.. போக முயற்சித்தால் விரல்களை வெட்டிவிடுவோம்.. பேசாம இரு என்று மிரட்டியதாக, தனது சிறுவயது மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 
 

click me!