அடுத்தடுத்த யார்க்கரில் ஸ்டம்பை தெறிக்கவிட்ட ஷமி.. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வீடியோ

By karthikeyan VFirst Published Jan 18, 2020, 10:25 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அந்த அணியின் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியாத இந்திய பவுலர்கள், இரண்டாவது போட்டியில் ஸ்டம்புகளை தெறிக்கவிட்டதுடன் ஆல் அவுட்டும் செய்தனர். 
 

சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றுள்ள அணியாக இந்திய அணி திகழ்கிறது. பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் என இந்திய அணி மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது. இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் சிறந்தது என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாதது அதிர்ச்சியாக அமைந்தது. 

Also Read - சதத்தை நூலிழையில் தவறவிட்ட ஸ்மித்.. திருப்புமுனையை ஏற்படுத்திய குல்தீப்.. இந்திய அணி அபார வெற்றி

முதல் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி, 38வது ஓவரிலேயே அடித்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்தது மட்டுமல்லாமல், தங்களது விக்கெட்டை இழந்துவிடாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை தங்கள் அணிக்கு தேடிக்கொடுத்தார்கள். இந்திய அணி தோற்றது கூட பரவாயில்லை. ஆனால் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியாமல் தோற்றதுதான் மரண அடியாக இருந்தது. 

Also Read - போக்குக்காட்டிய தோனிக்கு ஆப்பு அடித்த பிசிசிஐ.. தோனியின் கெரியர் ஓவர்

இந்நிலையில், ராஜ்கோட்டில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றதுடன், அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி பழிதீர்த்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 340 ரன்களை குவித்தது. 341 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

Also Read - சுயநலத்தோட ஆடுன நிறைய வீரர்களை என் கெரியரில் பார்த்துருக்கேன்.. ஆனால் கோலி கிரேட்.. மனதார பாராட்டிய கம்பீர்

இந்த போட்டியில் ஃபாஸ்ட் பவுலர்கள் ஷமி, பும்ரா, சைனி ஆகிய மூவருமே அசத்தலாக வீசினர். ஷமி ரன்களை கொஞ்சம் அதிகமாக வழங்கியிருந்தாலும், அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 10 ஓவர்கள் வீசி 77 ரன்களை வழங்கிய ஷமி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்க வீரர் வார்னரை தனது இரண்டாவது ஓவரிலேயே வீழ்த்தி, 15 ரன்களிலேயே அந்த அபாயகரமான பேட்ஸ்மேனை பெவிலியனுக்கு அனுப்பிய ஷமி, அடுத்ததாக, அஷ்டன் டர்னர் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்தில் கிளீன் போல்டாக்கினார். துல்லியமான யார்க்கரின் மூலம் ஸ்டம்பை தெறிக்கவிட்டார் ஷமி. ஆனால் ஹாட்ரிக் மிஸ்ஸானது. இருந்தாலும் டர்னரையும் கம்மின்ஸையும் வீழ்த்திய யார்க்கர்கள் அபாரமானவை. அந்த வீடியோ இதோ..

click me!