#IPL ஆல்டைம் ஐபிஎல் பெஸ்ட் லெவன்..! ஷகிப் அல் ஹசனின் அதிரடி தேர்வு.. 2 பெரிய தலைகள் புறக்கணிப்பு

By karthikeyan VFirst Published Sep 14, 2021, 4:15 PM IST
Highlights

வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

உலகிலேயே அதிகமான பணம் புழங்கும் டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். 2008லிருந்து நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.

14வது சீசனில் 29 போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் நடக்கின்றன. அதற்காக அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். 

ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள ஷகிப் அல் ஹசன், 3ம் வரிசையில் கோலியையும், 4ம் வரிசை வீரராக ரெய்னாவையும் தேர்வு செய்துள்ளார். அதிரடி மன்னர்களும், ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களுமான கிறிஸ் கெய்ல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையும் அணியில் எடுக்கவில்லை.

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்த ஷகிப் அல் ஹசன், அவரையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். 2008லிருந்து சிஎஸ்கே அணியை வழிநடத்திவரும் தோனி, 3 முறை அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருப்பதுடன், ஒரேயொரு சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு சிஎஸ்கேவை அழைத்து சென்றுள்ளார்.

6ம் வரிசையில் கேஎல் ராகுலையும், ஆல்ரவுண்டர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ஷகிப் அல் ஹசன், ஃபாஸ்ட் பவுலர்களாக லசித் மலிங்கா, பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் பெஸ்ட் லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.
 

click me!