#IPL2021 நட்சத்திர வீரருக்கு காயம்..! சிஎஸ்கே அணிக்கு மோசமான கெட்ட செய்தி.. தொடக்க வீரராக இறங்கப்போவது யார்..?

By karthikeyan VFirst Published Sep 14, 2021, 3:01 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஃபாஃப் டுப்ளெசிஸுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு மரண அடியாக விழுந்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. அதற்காக அமீரகம் சென்றுள்ள அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஐபிஎல்லில் இருந்து விலகிய சில வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணிகள் அறிவித்துவருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் தான் அதிகமாக விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அந்த அணிகள் அறிவித்துவிட்டன.

அமீரகத்திற்கு முதல் அணியாக சென்ற தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 4வது முறையாக கோப்பையை வெல்ல தீவிரமாக தயாராகிவருகிறது.

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு ஒரு விரும்பத்தகாத செய்தி கிடைத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர, சீனியர் வீரரும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ஃபாஃப் டுப்ளெசிஸ், கரீபியன் பிரீமியர் லீக்கில் காயமடைந்துள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டுப்ளெசிஸ், அந்த அணிக்காக பேட்டிங், கேப்டன்சி ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றார். இன்று அரையிறுதியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், டுப்ளெசிஸுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. 

எனவே அவர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் ஆடவில்லை. ஐபிஎல் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அவர் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. டுப்ளெசிஸ் ஆடவில்லை என்றால் அது சிஎஸ்கே அணிக்கு மரண அடியாக இருக்கும். 

ஐபிஎல் 14வது சீசன் ஆடியவரை, 7 போட்டிகளில் 320 ரன்களை குவித்த டுப்ளெசிஸ், இந்த சீசனின் முதல் பாதியில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் 3ம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டுப்ளெசிஸ் ஆடவில்லை என்றால் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அம்பாதி ராயுடு தொடக்க வீரராக இறங்க வாய்ப்புள்ளது.
 

click me!