ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது..! பும்ராவுடனான போட்டியில் ஜோ ரூட் வென்றார்

Published : Sep 13, 2021, 10:02 PM IST
ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது..! பும்ராவுடனான போட்டியில் ஜோ ரூட் வென்றார்

சுருக்கம்

ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை ஜோ ரூட் வென்றார்.  

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடிய ஒரு கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கிவருகிறது. அதற்காக, ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடிய 3 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். அவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஐசிசி விருது வழங்கப்படும்.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.

இவர்களில் ஜோ ரூட் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்றார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அருமையாக விளையாடிய ரூட் ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலுமே சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட்டில் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரூட் அடித்த ரன்கள் - 64, 109, 180*, 33, 121, 21, 36.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி