அலட்சியமா முடிவெடுக்காதீங்க.. நாங்க உங்களோட ஆட விரும்புறோம்..! பிசிசிஐக்கு ஷாஹித் அஃப்ரிடி வேண்டுகோள்

By karthikeyan V  |  First Published Mar 24, 2023, 4:00 PM IST

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆசிய கோப்பையில் ஆட வேண்டும் என்றும், இதுதொடர்பாக அலட்சியமாக முடிவெடுத்து விடாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து நல்ல முடிவாக எடுக்க வேண்டும் என்றும் ஷாஹித் அஃப்ரிடி பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 


இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று ஆட அனுமதிப்பதில்லை.

2012ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ  அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

Tap to resize

Latest Videos

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரஸ்பர இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடாதீங்க..! செம கடுப்பான கபில் தேவ்

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், ஒருநாள் உலக கோப்பை இந்தியாவிலும் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசாங்கம் தான் முடிவு எடுக்கும். அதன்படிதான் பிசிசிஐ செயல்பட முடியும். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதிக்காது என்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆடுவதற்கு பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. கடந்த மாதம் கூட இதுகுறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மாதம் இதுதொடர்பாக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஆசிய அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி கேள்வி எழுப்பியிருந்தார்.

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ஷாஹித் அஃப்ரிடி, இந்த பிரச்னையை எல்லாம் பிசிசிஐ தீர்க்க வேண்டும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்பதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விருப்பம். அதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வந்து ஆட விரும்புகிறது. இதுதொடர்பாக பிசிசிஐ அலட்சியமாக முடிவெடுக்காமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து நல்ல முடிவாக எடுக்க வேண்டும். பிசிசிஐ முடிவெடுப்பதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருடன் ஆலோசித்துவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அஃப்ரிடி கூறியுள்ளார்.
 

click me!