அஃப்ரிடியின் ஆல்டைம் உலக லெவனில் பல்லை இளிக்கும் அவரது நேர்மை..!

By karthikeyan VFirst Published Jun 16, 2021, 9:02 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவனில் ஒரேயொரு இந்திய வீரரை மட்டுமே தேர்வு செய்துள்ள அதேவேளையில், 5 பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாஹித் அஃப்ரிடி சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர்போனவர். குறிப்பாக இந்தியா குறித்தும் இந்திய கிரிக்கெட் குறித்தும் எப்போதுமே வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது அவரது வழக்கம்.

முன்னாள் வீரர்கள் பலரும் ஆல்டைம் உலக லெவனை தேர்வு செய்வது வழக்கம். எந்த நாட்டு வீரராக இருந்தாலும், நேர்மையான முறையில் உலக லெவனை தேர்வு செய்வார்கள். தங்கள் நாட்டு வீரர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்பதைப்போல் சீன் போட முயற்சி செய்யமாட்டார்கள். 

ஆனால் அப்படியான நேர்மையை அஃப்ரிடியிடம் எதிர்பார்க்க முடியாது. அவர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவனில் 5 வீரர்கள் பாகிஸ்தானியர்கள்.

பாகிஸ்தானை சேர்ந்த சயீத் அன்வர், ஆஸி., வீரர் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்த அஃப்ரிடி, ரிக்கி பாண்டிங்கை 3ம் வரிசையிலும், சச்சின் டெண்டுல்கரை 4ம் வரிசையிலும் தேர்வு செய்தார். இன்சமாம் உல் ஹக்கை 5ம் வரிசையில் தேர்வு செய்து, அவரையே கேப்டனாகவும் தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக கோலோச்சி 2 உலக கோப்பைகளை வென்ற ரிக்கி பாண்டிங்கை விட இன்சமாம் உல் ஹக் தான் சிறந்த கேப்டனாம். இதிலேயே அஃப்ரிடியின் நேர்மை அம்பலப்பட்டுவிட்டது.

விக்கெட் கீப்பராக பாகிஸ்தானை சேர்ந்த ரஷீத் லத்தீஃபை தேர்வு செய்தார் அஃப்ரிடி. மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான கில்கிறிஸ்ட்டை அணியில் எடுத்துவைத்துக்கொண்டு, அவரை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யாமல் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதற்காக ரஷீத் லத்தீஃபை தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம், அக்தர் ஆகியோருடன் மெக்ராத்தையும், ஸ்பின்னராக ஷேன் வார்னையும் தேர்வு செய்துள்ளார். இந்த லெவனில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்திய வீரர். 

ஷாஹித் அஃப்ரிடி தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்:

சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக்(கேப்டன்), ஜாக் காலிஸ், ரஷீத் லத்தீஃப்(விக்கெட் கீப்பர்), வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத், ஷேன் வார்ன், ஷோயப் அக்தர்.
 

click me!