திறமைசாலிகள் பாகிஸ்தானில் மட்டுமே இருப்பதுபோல ஒரு ஆல்டைம் அணி தேர்வு! இதுக்கு அஃப்ரிடி சும்மா இருந்திருக்கலாம்

By karthikeyan VFirst Published Apr 9, 2020, 9:08 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷாஹித் அஃப்ரிடி, தான் ஆடிய காலத்தில் ஆடிய வீரர்கள் தனது பார்வையில் சிறந்த வீரர்களை கொண்ட டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.
 

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சக வீரர்களுடன் அல்லது ரசிகர்களுடன் உரையாடுவது அல்லது தங்களது ஆல்டைம் பெஸ்ட் அணிகளை தேர்வு செய்வது என ஏதாவது ஒருவகையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

ஷேன் வார்ன் தான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த டெஸ்ட்  அணி, ஒருநாள் அணி மற்றும் அனைத்து அணிகளின் ஆல்டைம் பெஸ்ட் லெவன் ஆகியவற்றை தேர்வு செய்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாஹித் அஃப்ரிடி, தான் ஆடிய காலத்தில் ஆடிய வீரர்களை கொண்ட ஆல்டைம் அணியை தேர்வு செய்துள்ளார். மற்ற முன்னாள் வீரர்களை போல அல்லாமல், அஃப்ரிடி தேர்வு செய்தது முழுக்க முழுக்க பாரபட்சமான அணி என்பது சிறுவர்களுக்கே புரியும். அந்தளவிற்கு ஒரு அணியை தேர்வு செய்துள்ளார்.

திறமைசாலிகள் அனைவரும் பாகிஸ்தானிலேயே இருப்பது போன்ற ஒரு அணியை தேர்வு செய்துள்ளார். 11 வீரர்களில் 5 பேர் பாகிஸ்தானியர்கள். 4 வீரர்கள் ஆஸ்திரேலியர்கள். இதுவே 9 ஆகிவிட்டது. எஞ்சிய இரண்டில் ஒருவர் இந்திய வீரர், மற்றொருவர் தென்னாப்பிரிக்க வீரர். அந்த ஒரு இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர்,  தென்னாப்பிரிக்க வீரர் - ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ்.

அஃப்ரிடி தேர்வு செய்த ஆல்டைம் அணி:

சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ், ரஷீத் லத்தீஃப்(விக்கெட் கீப்பர்), வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், க்ளென் மெக்ராத், ஷோயப் அக்தர்.

ஆடம் கில்கிறிஸ்ட் இருக்கும் அணியில் அவரை விக்கெட் கீப்பராக்காமல், தங்கள் நாட்டை சேர்ந்த ரஷீத் லத்தீஃபை தேர்வு செய்திருக்கிறார் அஃப்ரிடி. பரந்த மனப்பான்மையுடன் ஆல்டைம் அணியை தேர்வு செய்ய மனமில்லாத அஃப்ரிடி, இந்த அணியை தேர்வு செய்ததற்கு சும்மாவே இருந்திருக்கலாம்.
 

click me!