நான் எதிர்த்து ஆடியதில் இவங்க 11 பேர் தான் பெஸ்ட்.. ஷேன் வார்ன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணி

By karthikeyan VFirst Published Apr 9, 2020, 8:01 PM IST
Highlights

ஷேன் வார்ன், தான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார்.
 

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, ஆல்டைம் பெஸ்ட் அணிகளை தேர்வு செய்வது என ஏதாவது ஒரு வகையில், ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், ஏற்கனவே தான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த ஆல்டைம் டெஸ்ட் அணியை தேர்வு செய்திருந்த ஷேன் வார்ன், தற்போது ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார்.

தான் எதிர்த்து ஆடியதில் சிறந்த ஆல்டைம் ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கையும் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவையும் தேர்வு செய்துள்ளார் ஷேன் வார்ன். 

ஜெயசூரியாவை தொடக்க வீரராக தேர்வு செய்ததால் சச்சின் டெண்டுல்கரை மூன்றாம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளார். சச்சின் - சேவாக் இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடி என்றபோதிலும் சச்சின் எந்த வரிசையிலும் ஆடக்கூடியவர் என்பதாலும் ஜெயசூரியா பிரத்யேக தொடக்க வீரர் என்பதால் ஷேன் வார்ன், சச்சினை மூன்றாம் வரிசைக்கு தேர்வு செய்திருக்கலாம்.

நான்காம் வரிசை வீரராக மற்றொரு ஜாம்பவான் பிரயன் லாராவையும் ஐந்தாம் வரிசைக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான கெவின் பீட்டர்சனையும் ஷேன் வார்ன் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக குமார் சங்கக்கராவையும் ஆல்ரவுண்டராக இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃபையும் தேர்வு செய்த ஷேன் வார்ன், ஃபாஸ்ட் பவுலர்களாக மிரட்டல் பவுலர்களான வாசிம் அக்ரம், குர்ட்லி ஆம்ப்ரூஸ் மற்றும் ஷோயப் அக்தர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பவுலராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரியை தேர்வு செய்துள்ளார்.

அனில் கும்ப்ளே, சாக்லைன் முஷ்டாக், முரளிதரன் ஆகிய லெஜண்ட் ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்யாமல் டேனியல் வெட்டோரியை தேர்வு செய்துள்ளார். 

ஷேன் வார்ன் தேர்வு செய்த அணி:

சேவாக்,  சனத் ஜெயசூரியா, சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, கெவின் பீட்டர்சன், குமார் சங்கக்கரா(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, ஷோயப் அக்தர், குர்ட்லி ஆம்ப்ரூஸ்.
 

click me!