இந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..! அஃப்ரிடியின் ஆணவ பேச்சு

By karthikeyan VFirst Published Jul 5, 2020, 6:08 PM IST
Highlights

இந்திய அணியை பலமுறை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கதறவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியை பலமுறை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கதறவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கங்குலி கேப்டன் ஆனதற்கு பிறகு 2000ம் ஆண்டுக்கு பின்னர், பாகிஸ்தானை அதிகமான போட்டிகளில் வீழ்த்தி இந்திய அணி நிறைய வெற்றிகளை குவித்துள்ளது. குறிப்பாக உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதேயில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக அதிகமான வெற்றிகளை கங்குலி தலைமையிலான அணி தான் குவிக்க தொடங்கியது. அதன்பின்னர் தோனி, கோலி ஆகிய கேப்டன்கள் கங்குலியின் அடிச்சுவட்டை பின்பற்றி, பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி கோலோச்சும் அணியாக மென்மேலும் மேம்படுத்தியுள்ளனர். இந்திய அணி வளர்ச்சியடைந்து பூதாகர சக்தியாக வளர்ந்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி வீழ்ச்சியடைந்திருக்கிறது. 

கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக அதிகமான வெற்றிகளை குவிக்கிறது. ஆனால் அதற்கு முன் பாகிஸ்தான் அணி தான் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தி அதிகமான வெற்றிகளை பெற்றிருந்தது.

வழக்கமாக இந்திய அணி குறித்தும் இந்தியா குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறி அதற்கு தகுந்த பதிலடியை வாங்கிக்கொண்டு மூக்குடைந்து செல்வதே அஃப்ரிடியின் வழக்கம். அந்தவகையில், இப்போதும் அப்படியான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். பழைய பஞ்சாங்கத்தை பாடுவதில் வல்லவரான அஃப்ரிடி, அதைத்தான் இப்போதும் செய்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஃப்ரிடி, இந்தியாவுக்கு எதிராக ஆடத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்திய அணியை பலமுறை அடித்து துவம்சம் செய்து கதறவிட்டிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக ரசித்து மகிழ்ந்து உற்சாகமாக ஆடுவேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும்போதும் அதிக அழுத்தம் இருக்கும். அதுவும் எனக்கு பிடிக்கும். இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சிறந்த மற்றும் பெரிய அணிகள். எனவே அவற்றிற்கு எதிராக ஆடத்தான் பிடிக்கும் என்றார். 

இந்திய அணிக்கு எதிராக 1980-1990களில் பாகிஸ்தான் அதிகமான வெற்றிகளை பெற்றிருக்கிறது. 1980களில் இரு அணிகளும் ஆடிய ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் 19 வெற்றிகளை பெற்ற நிலையில், இந்தியா வெறும் 9 வெற்றிகளைம் மட்டுமே பெற்றது. 1990களில் இரு அணிகளும் ஆடிய 48 போட்டிகளில் 28-18 என பாகிஸ்தான் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 2000க்கு பின்னர் இரு அணிகளும் மோதியதில் இந்தியா அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளது. 
 

click me!