2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை வென்றார் ஷாஹீன் அஃப்ரிடி..!

Published : Jan 24, 2022, 06:59 PM IST
2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை வென்றார் ஷாஹீன் அஃப்ரிடி..!

சுருக்கம்

2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் பாகிஸ்தான் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி.  

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் வீரர்களை தேர்வு செய்து ஐசிசி விருதுகளை வழங்கும். அந்தவகையில், 2021ம் ஆண்டில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது ஐசிசி.

2021ம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும், சிறந்த ஒருநாள் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் ஜோ ரூட்.

2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டராக பாகிஸ்தானின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஷாஹீன் அஃப்ரிடி கடந்த ஆண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி பாகிஸ்தானின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

2021ம் ஆண்டில் 6 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்  ஷாஹீன் அஃப்ரிடி. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சராசரி 41.37 மற்றும் எகானமி 6.3 ஆகும். 21 டி20 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!