தாதாவுக்கு நான் போட்ட கண்டிஷன்.. சேவாக் சொன்னதை கேட்டு சிரித்த கங்குலி

Published : Jan 14, 2020, 03:45 PM IST
தாதாவுக்கு நான் போட்ட கண்டிஷன்.. சேவாக் சொன்னதை கேட்டு சிரித்த கங்குலி

சுருக்கம்

இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த அதிரடி தொடக்க வீரர்களில் வீரேந்திர சேவாக்கிற்கென்று தனி இடம் ஒன்றிருக்கிறது. முதல் பந்திலிருந்தே அடித்து ஆடி, எதிரணியை அல்லு தெறிக்கவிடுவார்.  

ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என்ற பாரபட்சமே இல்லாமல் அனைத்து வகையான பவுலிங்கையும் அசால்ட்டாக அடித்து துவைக்கக்கூடியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் விளாசியவர். 

கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான சேவாக், அவரது கெரியரின் தொடக்கத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தவர். யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகிய வீரர்களை வளர்த்தெடுத்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தான், சேவாக்கின் கெரியரிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்.

Also Read - இந்திய அணியில் ஒரேயொரு அதிர்ச்சி தேர்வு.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சேவாக்கிற்கு நம்பிக்கையூட்டி அவரை தொடக்க வீரராக இறக்கியது கங்குலி தான். இந்த விஷயத்தை கங்குலி மற்றும் சேவாக் ஆகிய இருவருமே ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மறுபடியும் அதுகுறித்து பேசியுள்ள சேவாக், கங்குலி தன்னை தொடக்க வீரராக இறங்க சொல்லியபோது, அவருக்கு போட்ட கண்டிஷன் குறித்து சேவாக் பேசியுள்ளார். 

பிசிசிஐ வருடாந்திர விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய சேவாக், 17-18 ஆண்டுகளுக்கு முன் ஒரு நபர்(கங்குலி) என்னை தொடக்க வீரராக இறங்க சொன்னார். எனக்கு தொடக்க வீரராக இறங்குவதில் எந்தவித பதற்றமும் இல்லை. ஏனெனில் தொடக்க வீரராக இறங்குவதற்கும் மிடில் ஆர்டரில் இறங்குவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் தொடக்க வீரராக இறங்குவதற்கு தாதாவிடம் ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன். நான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சரியாக ஆடாதபட்சத்தில், எனக்கு மறுபடியும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் என்று தாதாவிற்கு போட்ட கண்டிஷன் குறித்து பேசினார். 

Also Read - ரோஹித் பேட்டிங் ஆடுனா நான் டிவியை விட்டு நகரவே மாட்டேன்.. பாகிஸ்தான் லெஜண்ட் புகழாரம்

சேவாக் பேசியதை கேட்டு, மேடையில் இருந்த கங்குலி சிரித்துக்கொண்டிருந்தார். 
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?