இந்திய அணியில் ஒரேயொரு அதிர்ச்சி தேர்வு.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் பேட்டிங்

By karthikeyan VFirst Published Jan 14, 2020, 1:37 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் ஆட பணித்தது. 
 

3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடேவில் நடக்கிறது. பகலிரவு போட்டி என்பதால், இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், பந்துவீசுவது கடினம். எனவே டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் சமபலத்துடன் திகழ்வதால், போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். 

இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒரே ஒரு தேர்வு மட்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி மற்றும் நவ்தீப் சைனி ஆகிய மூவரும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் நவ்தீப் சைனி நல்ல வேகத்தில் துல்லியமாக வீசக்கூடியவர். பயிற்சியின்போது கூட, நல்ல வேகத்தில் துல்லியமாக வீசி ஸ்டம்ப்புகளை கழட்டி எறிந்தார். இலங்கைக்கு எதிரான டி20யில் சிறப்பாக பந்துவீசி நல்ல டச்சில் இருக்கிறார். 

Also Read - ரோஹித் பேட்டிங் ஆடுனா நான் டிவியை விட்டு நகரவே மாட்டேன்.. பாகிஸ்தான் லெஜண்ட் புகழாரம்

அப்படியிருக்கையில், நவ்தீப் சைனியை எடுக்காமல், ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி அளவிற்கு தரமான ஃபாஸ்ட் பவுலர் கிடையாது. ஆனால் ஓரளவிற்கு பேட்டிங் ஆடக்கூடியவர். இலங்கைக்கு எதிராக சில பெரிய ஷாட்டுகளை ஆடினார். ஆனால் வெறும் பவுலிங்கின் மதிப்பீட்டின் அடிப்படையில், சைனி தான் சிறந்தவர்.

Also Read - சின்ன பசங்களுக்கு நீங்கலாம் ஹீரோ மாதிரி.. கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடந்துக்கங்க.. சேவாக் அறிவுரை

இந்திய அணியில் சரியாக 5 பவுலர்கள் மட்டுமே உள்ளனர். அந்த ஐந்தில் ஷர்துல் தாகூரும் அடக்கம். கூடுதலாக ஒரு பார்ட் டைம் பவுலரே இல்லை. எனவே பும்ரா, ஷமி, ஷர்துல், குல்தீப், ஜடேஜா ஆகிய ஐவருமே சிறப்பாக வீசியாக வேண்டும். இவர்கள் ஐவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் கண்டிப்பாக ஷர்துல் தாகூரைத்தான் டார்கெட் செய்வார்கள். எனவே அவர் கவனமாக இருக்கவேண்டும். அவரது ஓவர்களை டார்கெட் செய்து அடித்து நொறுக்கும்பட்சத்தில், இந்திய அணிக்கு அது பெரும் பிரச்னையாக அமைந்துவிடும். அதுவும் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்து வழுக்கும் என்பதால் பவுலர்களுக்கு சவாலாக இருக்கும். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், ஷமி, பும்ரா. 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா. 
 

click me!