ஸ்டம்ப்புகளை கழட்டி எறியும் பும்ரா, சைனி.. ஆஸ்திரேலிய வீரர்களே ஆட்டத்துக்கு முன்னாடி இந்த வீடியோவை பார்த்துராதீங்க

By karthikeyan VFirst Published Jan 14, 2020, 11:10 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் முனையில் பும்ராவும் சைனியும் தீவிரமாக பந்துவீசி பயிற்சி எடுத்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடேவில் இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஆண்டு இந்தியா வந்தபோதே, ஆஸ்திரேலியா, இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது. இந்நிலையில், இம்முறை ஸ்மித், வார்னருடன் லபுஷேன் என்ற சிறந்த வீரரும் அணியில் இடம்பெற்றிருப்பதால், இந்திய அணியை கண்டிப்பாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணி உள்ளது. 

Also Read - ஆஸி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. உத்தேச இந்திய அணி

இந்திய அணியிலும் ரோஹித் - தவான் - ராகுல் - கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் என பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டாப் ஃபார்மில் இருக்கும் ஃபின்ச், வார்னர், ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு அல்லு தெறிக்கவிடும் அளவிற்கான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் இந்தியா வசம் உள்ளது. 

பும்ரா, ஷமி, சைனி ஆகியோர் நல்ல வேகத்துடனும் துல்லியமாகவும் வீசக்கூடியவர்கள். பும்ரா அதிவேகம் மற்றும் துல்லியமாக மட்டுமல்லாமல் ஸ்விங்கும் செய்யக்கூடியவர். ஷமி, பந்தின் சீமை பயன்படுத்தி அபாரமாக வீசக்கூடியவர். நவ்தீப் சைனியின் வேகம் மற்றும் துல்லியம் வேற லெவலில் உள்ளது. எனவே இவர்கள் மூவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கண்டிப்பாக கடும் சவாலாகவே இருக்கும்.

Also Read - இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகும் ஆஸ்திரேலிய வீரர்.. முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி

இன்று மதியம் போட்டி தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கு முன்னதாக பும்ரா மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இருவரும் வலையில் படுதீவிரமாக பந்துவீசி பயிற்சி செய்தனர். அவர்கள் இருவரும் அதிவேகத்தில் துல்லியமாக வீசி ஸ்டம்ப்புகளை கழட்டி எறிந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 
 

These two 🔥💥☄️ & firing on all cylinders pic.twitter.com/nrvKLnpnSj

— BCCI (@BCCI)
click me!