இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகும் ஆஸ்திரேலிய வீரர்.. முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி

By karthikeyan VFirst Published Jan 14, 2020, 10:33 AM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடேவில் இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம். 

ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதல் போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடக்கிறது. இரண்டாவது போட்டி 17ம் தேதி ராஜ்கோட்டிலும் கடைசி போட்டி 19ம் தேதி பெங்களூருவிலும் நடக்கிறது. 

முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடேவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு வந்தபோது, இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்றது. எனவே இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் கடந்த முறை ஸ்மித், வார்னர் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்த முறை வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. 

ரோஹித், தவான், ராகுல், கோலி - வார்னர், ஃபின்ச், ஸ்மித், லபுஷேன் என இரு அணிகளின் பேட்டிங் ஆர்டரும் வலுவாக உள்ளது. பவுலிங்கிலும் அப்படித்தான்.. பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி - கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் என இரு அணிகளின் பவுலிங்கும் சமபலத்துடன் உள்ளது. எனவே இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும்.

Also Read - ஆஸி.,க்கு எதிரான முதல் ஒருநாள்.. உத்தேச இந்திய அணி

இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் - வார்னர். ஸ்மித் மூன்றாம் வரிசையில் இறங்குவார். இந்த போட்டியில் மார்னஸ் லபுஷேன் அறிமுகமாகவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி, தனக்காக ரன்களையும் அணிக்காக வெற்றிகளையும் குவித்து கொடுத்து, மிகக்குறுகிய காலத்தில் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள  லபுஷேன்,இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியை தனது முதல் ஒருநாள் போட்டியாக ஆடவுள்ளார். 

எனவே லபுஷேன் நான்காம் வரிசையிலும் ஹேண்ட்ஸ்கம்ப் ஐந்தாம் வரிசையிலும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆறாம் வரிசையிலும் இறங்குவார்கள். ஸ்பின் ஆல்ரவுண்டராக அஷ்டன் அகரும் ஸ்பின் பவுலராக ஆடம் ஸாம்பாவும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய மூவரும் ஆடுவார்கள். 

Also Read - இடத்தையும் தேதியையும் மட்டும் சொல்லுங்கடா.. நாங்க ரெடி.. ஆஸ்திரேலிய கேப்டனின் சவாலை கெத்தா ஏற்ற கேப்டன் கோலி

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா. 
 

click me!