இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. நண்பா நீங்க என்ன சொல்றீங்க..? அக்தரின் கேள்விக்கு சேவாக்கின் அதிரடி பதில்

By karthikeyan VFirst Published Jun 15, 2019, 1:24 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் நாளை நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 

உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டி வரும் 16ம் தேதி நடக்கவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. 

எனவே முதன்முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்துவது கடினம். இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டி. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த போட்டி யூடியூப் சேனல் ஒன்றில் அக்தரும் சேவாக்கும் விவாதித்தனர். அப்போது, இவரும் நானும் பேசிக்கொள்ள மாட்டோம் என்றுதான் நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் நானும் இவரும் சிறந்த நண்பர்கள். சேவாக் மிகச்சிறந்த மனிதர் என்று கூறினார் அக்தர். 

பின்னர் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து சேவாக்கிடம் அக்தர் கேள்வி எழுப்பினார். கண்டிஷன்ஸ், டாஸ் ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டு அவற்றையெல்லாம் நீங்கள் ஆராய்ந்த வகையில், எந்த அணி வெல்லும் என்று நினைக்கிறீர்கள் என்று சேவாக்கிடம் அக்தர் கேட்டார். 

அதற்கு பதிலளித்த சேவாக், பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை கண்டிப்பாக வீழ்த்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

அக்தரும் சேவாக்கும் ஒன்றாக கிரிக்கெட் ஆடிய காலத்தில், அக்தரின் பந்தை அதிரடியாக அடித்ததை போலவே அவரது கேள்விக்கும் அதிரடியாக பதிலளித்துள்ளார் சேவாக். 

click me!