தோனியை இனிமேல் அணியில் எடுத்து மட்டும் என்ன பிரயோஜனம்..? தோனியின் கேப்டன்சியில் ஆடிய முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 19, 2020, 4:14 PM IST
Highlights

தோனியை மீண்டும் அணியில் எடுப்பது வீண் என்று முன்னாள் அதிரடி வீரர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, இந்திய அணியிலும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இடம்பெறவில்லை. உலக கோப்பைக்கு பின்னர் தோனி கிரிக்கெட்டே ஆடவில்லை. 

இதற்கிடையே தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பராக இந்திய அணியால் உருவாக்கப்பட்ட ரிஷப் பண்ட், தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பிவந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்ததால், விக்கெட் கீப்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட ராகுல், சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். பேட்டிங்கிலும் அபாரமாக ஆடி அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைத்ததால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்படாமல், ராகுலே விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த தொடர்களிலும் அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்த ராகுல், விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார்.

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவரும் நிலையில், ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். ஹர்திக் பாண்டியாவும் அணிக்கு திரும்பியிருக்கிறார். ரிஷப் பண்ட்டும் புறக்கணிக்கப்படவில்லை. அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்றாலும் அணியில் இருக்கிறார். இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது. 

இந்திய டி20 அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் நடக்குமா இல்லையா என்பது சந்தேகமாக இருந்தாலும், தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

Also Read - பிளான் ஏ-வும் இல்ல பி-யும் இல்ல.. ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ-யின் அதிரடி திட்டம்

இதுகுறித்து பேசிய சேவாக், தோனி அணியில் சேர்த்தால் எந்த இடத்தில் யாருக்கு பதிலாக ஆடவைப்பது? ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே நன்றாக ஆடிவருகிறார்கள். அதிலும் ராகுல் சமீபத்தில் செம ஃபார்மில் அருமையாக ஆடிவருகிறார். அதனால் இவர்கள் இருவரில் ஒருவரை நீக்குவதற்கு காரணமே கிடையாது, அதனால் தோனிக்கு அணியில் இடமே கிடையாது என்று சேவாக் தெரிவித்துள்ளார். 

click me!