முதல் முறையாக டி20 உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து – இங்கிலாந்து பலப்பரீட்சை!

Published : Jun 04, 2024, 09:25 PM IST
முதல் முறையாக டி20 உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து – இங்கிலாந்து பலப்பரீட்சை!

சுருக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 6ஆவது போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 6ஆவது போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதுவரையில் இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. முதல் முறையாக டி20 கிரிக்கெட்டிலும், உலகக் கோப்பை டி20 போட்டியிலும் விளையாடி வருகின்றன. டாஸ் போடப்பட்ட பிறகு மழை குறுக்கீடு ஏற்பட்ட நிலையில் போட்டியானது கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃபா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.

ஸ்காட்லாந்து:

ஜார்ஜ் முன்சே, மைக்கேல் ஜோன்ஸ், பிராண்டன் மெக்கல்லம், ரிச்சி, பெர்ரிங்டன் (கேப்டன்), மேத்யூ கிராஸ் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ், மார்க் வாட், கிறிஸ்டோபர் சோல், பிராட் வீல், பிராட்லி குர்ரே.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!