ரஞ்சி டிராபி ஃபைனலில் பெங்கால் அணியை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய சௌராஷ்டிரா..!

By karthikeyan V  |  First Published Feb 16, 2023, 3:37 PM IST

ரஞ்சி டிராபி ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணியை வெறும் 174 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது சௌராஷ்டிரா அணி.
 


ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கியது. பெங்கால் - சௌராஷ்டிரா அணிகள் மோதும் ஃபைனலில் டாஸ் வென்ற  சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சௌராஷ்டிரா அணி:

Tap to resize

Latest Videos

ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), ஜெய் கோஹில், விஷ்வராஜ் ஜடேஜா, ஷெல்டான் ஜாக்சன், அர்பிட் வசவடா, சிராக் ஜானி, பிரெராக் மன்கத், பார்ட் புட், தர்மேந்திரசின் ஜடேஜா, ஜெய்தேவ் உனாத்கத் (கேப்டன்), சேத்தன் சகாரியா.

IND vs AUS: நீங்க 2வது டெஸ்ட்டில் ஆடலாம்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த பிசிசிஐ..!

பெங்கால் அணி:

அபிமன்யூ ஈஸ்வரன், சுமந்தா குப்தா, சுதிப் குமர் கராமி, அனுஸ்துப் மஜும்தர், மனோஜ் திவாரி (கேப்டன்), ஷபாஸ் அகமது, அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப், ஆகாஷ் கட்டாக், இஷான் போரெல், முகேஷ் குமார்.

முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி பேட்ஸ்மேன்கள் மளமளவென ஆட்டமிழக்க, அந்த அணி 65 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அபிமன்யூ ஈஸ்வரன்(0), மஜும்தர்(16), மனோஜ் திவாரி (7) ஆகியோர் சொதப்பினர். 65 ரன்களுக்கே 6 விக்கெட்டை இழந்து படுமோசமான நிலையில் இருந்த சௌராஷ்டிரா அணியை, ஷபாஸ் அகமது மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து 7வது விக்கெட்டுக்கு 101 ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு உயர்த்தி கொடுத்தனர். அபிஷேக் போரெல் 50 ரன்களும், ஷபாஸ் அகமது 69 ரன்களும் அடித்தனர். 

சௌராஷ்டிரா அணியின் பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்த பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 174 ரன்கள் மட்டுமே அடித்தது. சௌராஷ்டிரா அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், சிராக் ஜானி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பாபர் அசாமை தூக்கிட்டு பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ஹசன் அலி அதிரடி

இதையடுத்து சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.

click me!