டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ்.. புறக்கணிக்கப்பட்ட சர்ஃபராஸ் கான்.! வலியையும் வேதனையையும் பகிர்ந்த சர்ஃபராஸ்

By karthikeyan V  |  First Published Jan 23, 2023, 11:58 PM IST

முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மலை மலையாக ரன்களை குவித்தும் கூட, இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் எடுக்கப்பட்டு, தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ஃபராஸ் கான் கருத்து கூறியுள்ளார்.
 


ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான், தனது அபாரமான பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். 2019-2020 ரஞ்சி சீசனில் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களையும், 2021-2022 சீசனில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 982 ரன்களையும் குவித்துள்ளார் சர்ஃபராஸ் கான்.

ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி ஏராளமான ரன்களை குவித்துவருகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. டான் பிராட்மேனுக்கு அடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் 80 ரன்களை சராசரியாக வைத்திருக்கும் வீரர் சர்ஃபராஸ் கான் தான். அப்படியிருக்கையில், அவரை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இர்ஃபான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகிய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

Tap to resize

Latest Videos

வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்கள்..! மௌனம் கலைத்த ராகுல் டிராவிட்

இந்நிலையில், இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தன்னை புறக்கணிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 

ரஞ்சி தொடரில் கடைசியாக டெல்லிக்கு எதிராக ஆடிய போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்தார் சர்ஃபராஸ் கான்.  இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 125 ரன்கள் சர்ஃபராஸ் கான் அடித்தது. அபாரமாக பேட்டிங் ஆடி முதல் தர கிரிக்கெட்டில் தனது 13வது சதத்தை விளாசினார் சர்ஃபராஸ் கான். 37வது ரஞ்சி போட்டியில் 13வது சதத்தை அடித்து அசத்தியிருந்தார்.

சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் அசாதாரணமான பேட்டிங்கை தொடர்ச்சியாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்தும் கூட அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் எடுக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் எடுக்கப்படுகிறார் என்றால், ஒரு இடம் காலியாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு இடம் இருக்கிறது என்றால், டெஸ்ட் அணியை பொறுத்தமட்டில் அந்த இடத்திற்கு சூர்யகுமாரை விட, சர்ஃபராஸ் கானே  தகுதியான வீரர் என்பதே அனைவரின் கருத்து. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் எனக்கு நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஒன்றாக இணைந்து ஆடியபோது நெருங்கி பழகியிருக்கிறோம். அவரிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். நீண்டகால காத்திருப்புக்கு பிறகு தான் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். அவரது அனுபவம் மற்றும் நீண்டகால காத்திருப்பின் விளைவுதான் அவரது தேர்வு. 

பெரிய தவறு செய்தும் ஐசிசி தண்டனையிலிருந்து இஷான் கிஷன் தப்பியது எப்படி..?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது என் பெயர் இல்லை என்றதுமே சோகமாகவும் வருத்தமாகவும் இருந்தது. என் இடத்தில் வேறு எந்த வீரராக இருந்தாலும் சோகமாகத்தான் இருந்திருக்கும். எனக்கும் சோகமாகத்தான் இருந்தது. ஏன் நாம் எடுக்கப்படவில்லை என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். சோகம் தாங்காமல் அழுதேன் என்று சர்ஃபராஸ் கான் தெரிவித்தார்.
 

click me!