இந்தியாவின் தோல்விக்கு நாங்க காரணமா..? சும்மா எதையாவது சொல்லக்கூடாது.. சர்ஃபராஸ் அகமது அதிரடி

By karthikeyan VFirst Published Jul 8, 2019, 5:16 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாகவே பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, இந்திய அணி பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாது. எனவே வேண்டுமென்றே தோற்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். 

உலக கோப்பை தொடரில் ஐந்து வெற்றிகளையும் நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளையும் பெற்றும் கூட அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது பாகிஸ்தான் அணி. இது அந்த அணிக்கு துரதிர்ஷ்டமான சம்பவம்தான்.

நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் குறைவாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் அணி. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான படுதோல்வி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகள் என தொடர் தோல்விகளுக்கு பிறகு வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி கண்டது. 

இந்த உலக கோப்பை தொடரின் முதற்பாதியில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி அதிலிருந்து மீண்டெழுந்து பிற்பாதியில் அசத்தியது. ஆனாலும் நெட் ரன்ரேட் குறைவாக இருந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய சிறந்த அணிகளை வீழ்த்தியும் கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது உண்மையாகவே துரதிர்ஷ்டமான விஷயம் தான். இந்திய அனி இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையடுத்து பாகிஸ்தானை அரையிறுதிக்கும் முன்னேற விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே இந்திய அணி தோற்றதாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாகவே பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, இந்திய அணி பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாது. எனவே வேண்டுமென்றே தோற்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்திய அணி அதேபோலவே இங்கிலாந்திடம் தோற்றதால் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலரும் முன்னாள் வீரர்கள் சிலரும் தங்களது வாய்க்கு வந்தபடி வசைபாடினர். 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது,  இந்திய அணி தோற்றதற்கு பாகிஸ்தான் காரணமல்ல. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடியதால்தான் வெற்றி பெற்றது. அதனால் இதுபோன்ற கருத்துகளை எல்லாம் பரப்பக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 
 

click me!