அதெல்லாம் எங்களோட பலவீனம் கிடையாது.. கொஞ்சம் வரலாற திரும்பி பாருங்க.. இங்கிலாந்து பயிற்சியாளர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 8, 2019, 5:12 PM IST
Highlights

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிய அனைத்து போட்டிகளிலுமே வென்றது. தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் சேஸிங் செய்ததில் வெஸ்ட் இண்டீஸிடம் மட்டுமே வென்றது. பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவும் இலக்கை விரட்டமுடியாமல் தோற்றது. 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்திருந்தனர். அந்தவகையில், இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்த்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடினால் ஆக்ரோஷமாக ஆடி ரன்களை குவித்த அளவிற்கு இரண்டாவது பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. 

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிய அனைத்து போட்டிகளிலுமே வென்றது. தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் சேஸிங் செய்ததில் வெஸ்ட் இண்டீஸிடம் மட்டுமே வென்றது. பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவும் இலக்கை விரட்டமுடியாமல் தோற்றது. 

இந்நிலையில், பிபிசி ரேடியோவில் பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ், இங்கிலாந்து அணிக்கு சேஸிங் செய்வது கடினமான விஷயம் அல்ல என்று தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி சேஸிங் செய்த 17 போட்டிகளில் 14ல் வெற்றி பெற்றுள்ளது. எனவே இரண்டாவது பேட்டிங் ஆடுவதில் எங்கள் அணி வீரர்களுக்கு எந்தவித பயமோ தயக்கமோ கிடையாது. எங்கள் வீரர் முழு நம்பிக்கையில் உள்ளனர் என்று பேலிஸ் தெரிவித்தார். 
 
click me!