அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நியூசிலாந்துக்கு முன்னாள் கேப்டனின் முக்கியமான அறிவுரை

By karthikeyan VFirst Published Jul 8, 2019, 4:56 PM IST
Highlights

மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. 

மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 11ம் தேதி பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு மான்செஸ்டரில் இந்த போட்டி நடக்கிறது. 

இந்நிலையில், அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நியூசிலாந்து அணிக்கு அதன் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். உலக கோப்பை தொடரில் யாராலும் அடிக்க முடியாத பவுலராக திகழும் பும்ராவின் பவுலிங்கை அடிக்க நினைக்காமல் மற்ற பவுலர்களை டார்கெட் செய்து அடிக்க வேண்டும். பும்ரா அபாரமாக வீசுகிறார். எனவே அவரது பந்தை அடித்து ஆட நினைக்கக்கூடாது. இங்கிலாந்து அணி பும்ராவை விடுத்து மற்ற பவுலர்களை டார்கெட் செய்து அடித்தனர். அதேபோல நியூசிலாந்தும் ஆட வேண்டும் என்று வெட்டோரி ஆலோசனை கூறியுள்ளார். 

மிகத்துல்லியமான பவுலிங்கின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார் பும்ரா. தொடக்க ஓவர்களில் ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டை வீழ்த்தி கொடுக்கும் பும்ரா, மிடில் ஓவர்களில் தனது ஸ்பெல்லில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுக்கிறார். பின்னர் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் மற்றும் பவுன்ஸர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அலறவிடுகிறார். 

ஆகமொத்தத்தில் பும்ராவின் பவுலிங்கை விட்டுவிட்டு மற்ற பவுலர்களை அட்டாக் செய்ய நினைக்கும் எதிரணி வீரர்கள், அவர்களிடமும் விக்கெட்டை பறிகொடுத்துவிடுகின்றனர். துல்லியமான பவுலிங்கின் மூலம் உலகின் நம்பர் 1 பவுலராக பும்ரா திகழ்கிறார். இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் 8 போட்டிகளில் இந்திய அணி ஆடியுள்ளது. அதில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. அரையிறுதி போட்டியிலும் பும்ரா சிறப்பாக வீசி இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து செல்வார் என்பதில் சந்தேகமே இல்லை. 

இக்கட்டான சூழல்களிலும் கடைசி ஓவர்களிலும் பும்ரா டென்ஷனே ஆகாமல் நிதானமாகவும் தெளிவாகவும் இருந்து தனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துவிடுகிறார். அவரது நிதானமும் தெளிவும் அவருக்கு மிகப்பெரிய பலம். நியூசிலாந்து வீரர்கள் பும்ராவை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!