#ICCWTC ஃபைனல்: இந்திய அணியில் ஜடேஜாவிற்கு இடம் இல்லை..?

By karthikeyan VFirst Published Jun 11, 2021, 7:51 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்த போட்டி குறித்தும், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் மற்றும் பவுலிங் யூனிட் குறித்தும் பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சரண்தீப் சிங், வெயில் இல்லாமல் சீதோஷ்ண நிலை மந்தமாக இருந்தால் பும்ரா, ஷமி, இஷாந்த்துடன் கூடுதல் ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் தேவை. என்னுடைய தேர்வு ஷர்துல் தாகூர். முகமது சிராஜைவிட ஷர்துல் தாகூர் தான் என்னுடைய முதன்மை தேர்வு. ஏனெனில் பின்வரிசையில் பேட்டிங் ஆட பேட்டிங் தெரிந்த பவுலர் தேவை. ஷர்துல் தாகூர் பேட்டிங்கும் ஆடுவார். இங்கிலாந்து கண்டிஷனில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலர் ஷர்துல் தாகூர். உள்நாட்டு கிரிக்கெட்டில் நீண்ட அனுபவமும், புத்திக்கூர்மையும் கொண்ட வீரர் ஷர்துல்.

4வது பவுலராக ஷர்துல் தாகூர் ஆடினால் துரதிர்ஷ்டவசமாக ஜடேஜாவிற்கு அணியில் இடம் கிடைக்காது. ஏனெனில், நியூசிலாந்து அணியில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஷ்வின் தான் முதன்மை ஸ்பின்னராக ஆடுவார் என்று சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

click me!