பவுலிங் போடலைனா பாண்டியா டீம்ல தேவையே இல்ல..! அடுத்த ஆல்ரவுண்டரை தேடும் இந்திய அணி

By karthikeyan VFirst Published May 14, 2021, 5:12 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியா பவுலிங் வீசாததால், ஆல்ரவுண்டரான அவரது ரோலை பூர்த்தி செய்யமுடியாததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்துவரும் நிலையில், இதே நிலை நீடித்தால் மொத்தமாகவே அணியில் இடத்தை இழக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில் அவர் பந்துவீசவில்லை என்றால், அது மொத்த அணி காம்பினேஷனையே பாதிக்கும்.
 

தொடர்ச்சியாக ஆடமுடியாமல், தனக்கான நிரந்தர இடத்தை இழந்தார். அந்த காயத்திற்கு பிறகே, அவரது பணிச்சுமை மீது கவனம் செலுத்தப்படுகிறது. எனவே அவர் கடந்த 3 ஆண்டுகளாகவே பந்துவீசவில்லை. அரிதினும் அரிதாகத்தான் பந்துவீசுகிறார். 

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதால் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்போது பந்துவீசாததால் அவர் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை. அவர் இல்லாத டெஸ்ட் அணி நன்றாக செட்டாகி, வெற்றிகளை பெற்றுவருவதால் அவருக்கான அவசியமும் இல்லாமல் போய்விட்டது. அதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான அணியில் தனது இடத்தை இழந்தார்.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்றால், அது ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் அணியின் காம்பினேஷனை பாதிக்கும். எனவே அந்த அணிகளிலும் இடத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சரண்தீப் சிங், ஹர்திக் பாண்டியாவை அணி தேர்வாளர்கள் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததை புரிந்துகொள்ள முடிகிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரால் தொடர்ச்சியாக பந்துவீச முடியவில்லை. அவர், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்களும், டி20 போட்டிகளில் 4 ஓவர்களும் வீசியே ஆகவேண்டும். அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் ஆடமுடியாது. 

ஹர்திக் பந்துவீசவில்லை என்றால், அது காம்பினேஷனை கடுமையாக பாதிக்கும். ஹர்திக்கை அணியில் எடுத்து, ஆனால் அவர் பந்துவீசாத பட்சத்தில் கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க வேண்டிய கட்டாயம் உருவாகும். சூர்யகுமார் யாதவ் மாதிரியான ஒரு வீரரை சேர்க்காமல் கூடுதல் பவுலரை சேர்க்க வேண்டிவரும். அது அணி காம்பினேஷனை பாதிக்கும். 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆடமுடியாது. சுந்தர், அக்ஸர், ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகியோரும் ஆல்ரவுண்டர்கள் தான். ஹர்திக் பந்துவீசவில்லை என்றால், அவர்கள் ஆல்ரவுண்டர் பணியை செய்வார்கள் என்று சரண் தீப் சிங் தெரிவித்துள்ளார்.

click me!