#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் லெவன்..! ரிஷப் பண்ட் கேப்டன்

By karthikeyan VFirst Published May 13, 2021, 9:37 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 14வது சீசனில் ஆடியவரை சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக்.

இந்த சீசனில் டெல்லி அணிக்கு அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்து அந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான், பிரித்வி ஷா ஜோடியை இந்த சீசனின் சிறந்த தொடக்க ஜோடியாக தேர்வு செய்த பிராட் ஹாக், 3 மற்றும் 4ம் வரிசைகளில் முறையே சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி, டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து இந்த சீசனில் அந்த அணியை ஆதிக்கம் செலுத்தவைத்த கேப்டன் ரிஷப் பண்ட்டையே இந்த சீசனின் சிறந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக்.

அதிரடி மன்னன் மிஸ்டர் 360 டிவில்லியர்ஸை 5ம் வரிசையிலும், ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, சாம் கரன் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக ரிஸ்ட் ஸ்பின்னர்களான ரஷீத் கான் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரையும் தேர்வு செய்த பிராட் ஹாக், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் ஆவேஷ் கானை தேர்வு செய்துள்ளார்.

பிராட் ஹாக் தேர்வு செய்த ஐபிஎல் 14வது சீசனின் சிறந்த லெவன்:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர், கேப்டன்), டிவில்லியர்ஸ், ஜடேஜா, சாம் கரன், ரஷீத் கான், ராகுல் சாஹர், ஆவேஷ் கான், பும்ரா.
 

click me!