IPL 2022 சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்; தோனிக்கு மாற்று வீரர் இவரா? சோஷியல் மீடியா மூலம் பரபரப்பை கிளப்பிய வீரர்

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 6:25 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியுடன் இணையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. அடுத்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். மற்ற வீரர்கள் அனைவரையும் கழட்டிவிட வேண்டும். அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் அணி மாறவுள்ளனர். அதனால் இந்த ஏலம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் சிஎஸ்கே அணிக்குத்தான் மிக முக்கியமானது. ஏனெனில், மிகப்பெரிய ஜாம்பவானான தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியை வழிநடத்தப்போகும் கேப்டன் யார் என்பதை அந்த அணி முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 2008ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 12 சீசன்களாக(2சீசனில் சிஎஸ்கே ஆடவில்லை) சிஎஸ்கே அணியை வெற்றிகரமாக வழிநடத்தி ஐபிஎல்லில் ஆதிக்கம் செல்லுத்தவைத்து, 4 முறை கோப்பையையும் வென்று கொடுத்தவர் தோனி.

தோனி ஐபிஎல்லில் இன்னும் ஓய்வு அறிவிக்கவில்லை என்பதால் இன்னும் எத்தனை சீசன் ஆடுவார் என்பது தெரியவில்லை. ஆனாலும் இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனிக்கு மாற்று வீரரை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோனி மாதிரியான ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் இடத்தை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல.

இந்நிலையில், தோனிக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் தோனியின் மாண்பை பின்பற்றும் பொறுப்பு சஞ்சு சாம்சனிடம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அபாரமான திறமைசாலியான சஞ்சு சாம்சன், நிலைத்தன்மையுடன் ஆடாததால் இன்னும் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் தவித்துவரும் வீரர்.

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

ஆனால் அவரது திறமையை சந்தேகிக்கவே முடியாது. அசாத்தியமாக அடித்து ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர். தோனியை போலவே அவரும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தான் என்பது மட்டுமல்லாது, தோனியை போலவே நெருக்கடியான சூழல்களை நிதானமாக கையாளக்கூடியவர். சஞ்சு சாம்சனின் இந்த திறனை ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தும்போது பார்த்திருக்கிறோம்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இதுவரை ஆடிவந்த சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்துக்கு பிறகு அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார். அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக, தான் சார்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார் சஞ்சு சாம்சன். சாம்சனின் இந்த செயல், அவர் ராஜஸ்தான் அணியிலிருந்து விலகுவதாக விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

மேலும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
 

click me!