நீங்க சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா-வுல இருக்கு..! இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 4:58 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியதையடுத்து, இந்திய அணி தேர்வை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடைந்த படுதோல்விகளின் விளைவாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேற வேண்டியதாயிற்றூ.

சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி இடம்பெற்றிருந்த க்ரூப் 2-ல் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

இந்திய அணி சரியாக ஆடாமல் தோற்றதற்கு தவறான அணி தேர்வே காரணம் என விமர்சிக்கப்பட்டுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்களை இந்திய மெயின் அணியில் எடுக்காதது, அஷ்வினை முதல் 2 போட்டிகளில் ஆடவைக்காதது, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தது, சாஹலுக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ராகுல் சாஹரை ஆடவேவைக்காதது, விக்கெட் வீழ்த்த திணறிய வருண் சக்கரவர்த்திக்கு தொடர் வாய்ப்பளித்தது என இந்திய அணி தேர்வில் ஏகப்பட்ட தவறுகளை செய்தது.

இதையும் படிங்க - ரோஹித் - ராகுல் யாரை வேணா தூக்கிக்கங்க.. ஆனால் அந்த பையனை ஓபனிங்கில் இறக்கிவிடுங்க..! விவிஎஸ் லக்‌ஷ்மண் அதிரடி

இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், இந்திய அணி தேர்வை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங். குறிப்பாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை அணியில் எடுத்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங்,  யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை அணியில் எடுத்ததற்கு, அவர் வேகமாக பந்துவீசுவதுதான் காரணம் என்று கூறினர். ராகுல் சாஹரை டி20 உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்த பின்னர், சாஹல் ஐபிஎல்லில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் சாஹரை ஆடவைப்பதுபோல் அணியில் எடுத்துவிட்டு, அவரை ஒரு போட்டியில் கூட ஆடவைக்கவில்லை. 

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் சாதனையையே முறியடித்த முகமது ரிஸ்வான்..! தரமான சம்பவம்

உண்மையாகவே, சாஹலை விட ராகுல் சாஹர் சிறந்த ஸ்பின்னர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சாஹல் அபாயகரமான பவுலர். இந்திய அணிக்காக கடந்த காலங்களில் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்று ஹர்பஜன் சிங் அணி தேர்வு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

அதுமட்டுமல்லாது, 2017 சாம்பியன்ஸ் டிராபியுடன் ஓரங்கட்டப்பட்ட அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியை மீண்டும் நாடியது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க - ஐபிஎல், உள்நாட்டு தொடர்களுக்கான வீரர்கள் தேர்வில் தலைவிரித்தாடும் லஞ்சம்..! போலீஸிடம் கொத்தா சிக்கிய கும்பல்

click me!