INDA vs NZA: சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் இந்திய அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Sep 16, 2022, 4:00 PM IST
Highlights

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான  சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணியுடன் ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள்(4 நாள் டெஸ்ட்) கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகள் டிராவாகின. 3வது டெஸ்ட் நடந்துவருகிறது.

இதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - அவங்க 2 பேரும் இல்லாத ஒரு உலக கோப்பை டீமா..? இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்

ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களே கூட, சஞ்சு சாம்சனுக்காக குரல் கொடுத்தனர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல சஞ்சு சாம்சனை இந்திய அணியில் கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டு, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக அவர் பார்க்கப்படுவதை உறுதி செய்துள்ளது பிசிசிஐ.

சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்தியா ஏ அணியில் பிரித்வி ஷா, அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், திரிபாதி, ரஜாத் பட்டிதார் ஆகிய பேட்ஸ்மேன்களும்,  விக்கெட்கீப்பராக கேஎஸ் பரத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஸ்பின்னர்களாக ராகுல் சாஹர், குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது ஆகியோரும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், குல்திப் சென், நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், ராஜ் பவா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்

இந்தியா ஏ ஒருநாள் அணி:

சஞ்சு சாம்சன் (கேப்டன்), பிரித்வி ஷா, அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜாத் பட்டிதார், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, ஷர்துல் தாகூர், குல்திப் சென், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் பவா.
 

click me!