டி20 உலக கோப்பை: படுமட்டமான டீம் செலக்‌ஷன்.! பாகிஸ்தான் அணி தேர்வை விமர்சித்த முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 16, 2022, 3:12 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கு மோசமான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்திருப்பதாக அணி தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் முகமது ஆமீர்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணியை அறிவிக்க நேற்று கடைசிநாள் என்பதால் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

கடைசி தினமான நேற்றுதான் பாபர் அசாம் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் அதிரடி வீரர் ஃபகர் ஜமான் மெயின் அணியில் இடம்பிடிக்கவில்லை. காயம் காரணமாக அவர் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் அசத்திய ஷாநவாஸ் தஹானியும் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்

ஆசிய கோப்பையில் காயம் காரணமாக ஆடிராத ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டதால் பாகிஸ்தான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஷாஹீன் அஃப்ரிடி அணிக்கு திரும்பியது அந்த அணிக்கு கூடுதல் பலம். ஆசிய கோப்பையில் ஆடிராத ஹைதர் அலியும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர். 

ரிசர்வ் வீரர்கள் - ஃபகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.

பாகிஸ்தான் அணி தேர்வை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துவருகின்றனர். கேப்டன் பாபர் அசாம் அவரது நண்பர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்வதை சுட்டிக்காட்டும் விதமாக, பாகிஸ்தான் அணியில் உள்ள ஃப்ரெண்ட்ஷிப் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என்று ஷோயப் மாலிக் சாடியிருந்தார்.

இதையும் படிங்க - அவங்க 2 பேரும் இல்லாத ஒரு உலக கோப்பை டீமா..? இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வை படுமோசமான செலக்‌ஷன் என முகமது ஆமீர் விமர்சித்துள்ளார். தேர்வாளரின் மோசமான செலக்‌ஷன் என ஆமீர் டுவீட் செய்துள்ளார்.
 

chief slector ki cheap selection 😆

— Mohammad Amir (@iamamirofficial)
click me!