அவங்க 2 பேரும் இல்லாத ஒரு உலக கோப்பை டீமா..? இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 15, 2022, 9:04 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரையும் எடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் சந்து போர்டே.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 4 வீரர்கள் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்..! உலக கோப்பை வின்னிங் டீம் தேர்வாளரின் தரமான தேர்வு

இந்திய மெயின் அணியில் முகமது ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்படாததை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துவருகின்றனர்.

மேலும், தொடர்ச்சியாக சொதப்பிவரும் ரிஷப் பண்ட்டை எல்லாம் அணியில் எடுக்கும்போது, போதுமான வாய்ப்பு கொடுக்காமலேயே சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுவதும் விமர்சனத்துக்குள்ளானது. முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

அந்தவகையில், ஷமி மற்றும் சஞ்சு சாம்சனை எடுக்காதது குறித்து முன்னாள் வீரர் சந்து போர்டே அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சந்து போர்டே, இந்திய அணியில் ஏற்கனவே இருக்கும் வீரர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். ஷமியின் புறக்கணிப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல வேகத்தில் ஸ்விங் செய்யக்கூடிய ஷமியை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் புறக்கணித்தது பெரிய வியப்பு. அவர் ஆஸ்திரேலியாவில் கண்டிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ரோஹித் - கோலி ஓபனிங்..! பரிதாப ராகுல்

சஞ்சு சாம்சனையும் கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுத்திருக்க வேண்டும். அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவரும் ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி அணிக்கு பெரும் பலனை அளித்திருப்பார் என்று சந்து போர்டே தெரிவித்துள்ளார். 
 

click me!