டி20 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ஒருசில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

By karthikeyan V  |  First Published Sep 15, 2022, 6:52 PM IST

டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண ஒருசில நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.
 


டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத்தீர்ந்து வருகின்றன.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் வரும் அக்டோபர் 23ம் தேதி மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே எப்போதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மோதலாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்..! உலக கோப்பை வின்னிங் டீம் தேர்வாளரின் தரமான தேர்வு

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அந்தவகையில், மெல்போர்னில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண மொத்த டிக்கெட்டுகளும் ஒருசில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துள்ளது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ரோஹித் - கோலி ஓபனிங்..! பரிதாப ராகுல்

டி20 உலக கோப்பை போட்டிகளை காண 82 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளனர். சிறுவர்களுக்கான டிக்கெட் விலை $5 மட்டுமே. 85000 டிக்கெட்டுகள் சிறுவர்களுக்கான டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. 2020 மகளிர் உலக கோப்பைக்கு பிறகு  இந்த டி20 உலக கோப்பைக்குத்தான் 100% சதவிகித டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்திருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
 

click me!