டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்..! உலக கோப்பை வின்னிங் டீம் தேர்வாளரின் தரமான தேர்வு

By karthikeyan V  |  First Published Sep 15, 2022, 5:46 PM IST

டி20 உலக கோப்பையில் களமிறங்க இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
 


டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சிக்கப்பட்டாலும், வலுவான இந்திய அணி தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்திய அணிக்கு ஆதரவளிப்பது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ரோஹித் - கோலி ஓபனிங்..! பரிதாப ராகுல்

அந்தவகையில், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் முழு ஆதரவும் இந்திய அணிக்கு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் எது வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

அந்தவகையில், 2011 உலக கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி, ரோஹித் - ராகுல் ஆகிய இருவருமே தொடக்க வீரர்களாக ஆடலாம் என்று தெரிவித்துள்ளார். ரோஹித்துடன் கோலியை தொடக்க வீரராக இறக்கவேண்டும் என்று சிலர் வலியுறுத்திவரும் நிலையில், அதெல்லாம் தேவையில்லை; ரோஹித்தும் ராகுலுமே தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா என வழக்கமான பேட்டிங் ஆர்டரை உறுதி செய்துள்ளார் ஸ்ரீகாந்த். 

விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், விக்கெட் கீப்பர் ஃபினிஷராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார் ஸ்ரீகாந்த்.

ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார் ஸ்ரீகாந்த்.

இதையும் படிங்க - மிஸ்டர் அஃப்ரிடி & அக்தர் உங்க வேலையை நீங்க பாருங்க.! எப்ப ஓய்வு பெறணும்னு கோலிக்கு தெரியும்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்த இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!