டி20 உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

Published : Sep 15, 2022, 04:42 PM ISTUpdated : Sep 15, 2022, 06:45 PM IST
டி20 உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ரோஹித் - கோலி ஓபனிங்..! பரிதாப ராகுல்

ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்ததுடன், பெரிய அணிகளை ஆட்டம் காண செய்தது.  அதனால் ஆஃப்கானிஸ்தான் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி:

முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரான் (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), அஸ்மதுல்லா ஓமர்ஸாய், டார்விஷ் ரசூலி, ஃபரித் அகமது, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஹஸ்ரதுல்லா சேஸாய், இப்ராஹிம் ஜட்ரான், முஜீபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், காயிஸ் அகமது, ரஷீத் கான், சலீம் சாஃபி, உஸ்மான் கனி.

இதையும் படிங்க - மிஸ்டர் அஃப்ரிடி & அக்தர் உங்க வேலையை நீங்க பாருங்க.! எப்ப ஓய்வு பெறணும்னு கோலிக்கு தெரியும்

ரிசர்வ் வீரர்கள் - அஃப்சர் சேஸாய், ஷரஃபுதீன் அஷ்ரஃப், ரஹ்மத் ஷா, குல்பாதின் நைப்.
 

PREV
click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி
ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!