டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு.! நீயெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட.. தூக்கி எறியப்பட்ட அதிரடி வீரர்

Published : Sep 15, 2022, 07:23 PM IST
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு.! நீயெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட.. தூக்கி எறியப்பட்ட அதிரடி வீரர்

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்றே கடைசி நாள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் உட்பட முன்னணி அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இதையும் படிங்க - மிஸ்டர் அஃப்ரிடி & அக்தர் உங்க வேலையை நீங்க பாருங்க.! எப்ப ஓய்வு பெறணும்னு கோலிக்கு தெரியும்

பாபர் அசாம் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான், முகமது ரிஸ்வான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாத ஃபாஸ்ட் பவுலர்கள் ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். நசீம் ஷா, ஷான் மசூத், முகமது வாசிம் ஆகிய வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆசிய கோப்பையில் ஒரு போட்டியில் மட்டும் ஆடிய உஸ்மான் காதிரும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பையில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணியின் முக்கியமான அதிரடி வீரரான ஃபகர் ஜமான் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக மெயின் அணியில் இடம்பெறாத ஃபகர் ஜமான், ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானியும் ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ஒருசில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர். 

ரிசர்வ் வீரர்கள் - ஃபகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?