IPL 2022: ஐபிஎல் அம்பயர்கள் ரொம்ப மோசம்..! வைடுக்கு ரிவியூ எடுத்து கோபத்தை காட்டிய சாம்சன்.. வைரல் வீடியோ

Published : May 03, 2022, 04:44 PM ISTUpdated : May 03, 2022, 04:48 PM IST
IPL 2022: ஐபிஎல் அம்பயர்கள் ரொம்ப மோசம்..! வைடுக்கு ரிவியூ எடுத்து கோபத்தை காட்டிய சாம்சன்.. வைரல் வீடியோ

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் அம்பயர் தவறாக வைடு கொடுத்ததையடுத்து, அதற்கு ரிவியூ எடுத்து தனது கோபத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் கள நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டியின் முடிவே மாறிப்போகிறது.

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி கேபிடள்ஸுக்கு 36 ரன்கள்தேவைப்பட, முதல் 3 பந்துகளையும் சிக்ஸர் அடித்து வெற்றிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்தார் ரோவ்மன் பவல். அப்படியான சூழலில் அந்த ஓவரின் 3வது பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இடுப்புக்கு மேலே சென்ற அந்த பந்துக்கு அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், ஒரு பந்து கூடுதலாக கிடைப்பதுடன், ஒரு ஃப்ரீஹிட் டெலிவரியும் கிடைத்திருக்கும். அதன்மூலம் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும். ஆனால் அம்பயர் நோ பால் கொடுக்காததால் டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

அந்த சம்பவத்தின்போது அம்பயரின் முடிவுக்கு எதிராக, களத்தில் நின்ற தனது அணி வீரர்களை களத்திலிருந்து வெளியே வருமாறு டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் செய்கை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதே கவாஸ்கர் உட்பட பல முன்னாள் ஜாம்பவான்கள் ஐபிஎல் அம்பயரிங்கின் தரத்தை விமர்சித்ததுடன் கேள்விக்குள்ளாக்கினர்.

இந்நிலையில், அதேமாதிரி மற்றுமொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அம்பயர் வைடு இல்லாத பந்துகளுக்கு வைடு கொடுத்ததால் போட்டியின் முடிவே மாறியது.

கேகேஆருக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 152 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 153 ரன்களை கேகேஆருக்கு இலக்காக நிர்ணயித்தது. 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணிக்கு கடைசி 2 ஓவரில் 18 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் களத்தில் இருந்தனர்.

19வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, 3வது பந்தை வைடாக வீசினார். அதற்கு வீசப்பட்ட ரீபாலில் ரிங்கு சிங் பவுண்டரி அடிக்க சஞ்சு சாம்சன் அதிருப்தியடைந்தார். அதன்பின்னர் பிரசித் கிருஷ்ணா வீசிய 4வது பந்துக்கு அம்பயர் வைடு கொடுத்தார். பிரசித் கிருஷ்ணா ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே யார்க்கராக வீசிய அந்த பந்து உண்மையாகவே வைடு இல்லை. ஆனால் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் நகன்று சென்றும் அடிக்க முடியாததால் அதை வைடு என நினைத்து தவறுதலாக வைடு கொடுத்தார் அம்பயர். அதனால் செம கடுப்பான ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ரிவியூ செய்தார். உண்மையாகவே சாம்சன் விக்கெட்டுக்காக ரிவியூ எடுக்கவில்லை. வைடா இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்காக, தனது கோபத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் விதமாக ரிவியூ எடுத்தார்.

அதன்பின்னர் மீண்டும் 5வது பந்தையும் வைடு இல்லாததற்கு அம்பயர் வைடு கொடுக்க, இம்முறை அம்பயரிடம் நேரடியாகவே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சாம்சன். ஆனாலும் எந்த பயனும் இல்லை. அம்பயரின் தவறான முடிவுகளால் அந்த போட்டி அந்த ஓவரிலேயே முடிந்தது. அந்த ஓவரில் கேகேஆர் அணி 17 ரன்கள் அடிக்க ஆட்டம் டை ஆனது. கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து கேகேஆர் அணி வெற்றி பெற்றது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!