IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்..! சஞ்சய் மஞ்சரேக்கரின் அதிரடி தேர்வு

Published : Feb 07, 2023, 09:57 PM IST
IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்..! சஞ்சய் மஞ்சரேக்கரின் அதிரடி தேர்வு

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட் தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் களமிறங்குகின்றன.

இந்த தொடரில் ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் ஆடவில்லை. முதல் போட்டியில் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை. எனவே மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவுக்கு ஆட இடம் கிடைக்கும். அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரில் எந்தெந்த ஸ்பின்னர்கள் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி உள்ளது.

ஆசிய கோப்பை விவகாரத்திற்கு தீர்வு சொன்ன அப்துல் ரசாக்! இவரா இப்படி பேசுறது? வியப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்

இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். ரோஹித்துடன் கில் - ராகுல் இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பதை திடமாக மஞ்சரேக்கர் தேர்வு செய்யவில்லை.  அதன்பின்னர் புஜாரா, கோலி என்பது வழக்கமான பேட்டிங் ஆர்டர். 5ம் வரிசை வீரராக சூர்யகுமார் யாதவையும், விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தையும் தேர்வு செய்துள்ள மஞ்சரேக்கர், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களை மட்டுமே ஆடும் லெவனில் தேர்வு செய்துள்ளார்.

உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 ஃபாஸ்ட் பவுலர்களை ஆடும் லெவனில் எடுத்துள்ளார் மஞ்சரேக்கர். 

IND vs AUS: கடைசி நேர ட்விஸ்ட்.. ஆஸி., அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம்! அந்த 2 பேரில் யாருக்கு இடம்?

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல்/கில், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SRH-ன் இமாலய இலக்கை தவிடுபொடியாக்கிய பஞ்சாப்.. 200+ ரன்களை சேஸ் செய்து உலக சாதனை!
Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!