#INDvsENG இந்திய அணி அவரை ஆடவைப்பது ரிஸ்க் தான்..! என்ன செய்யப்போகிறார் கோலி..?

By karthikeyan VFirst Published Mar 20, 2021, 2:46 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் 2-2 என தொடர் சமனடைந்துள்ளது.

எனவே கடைசி போட்டியில் ஜெயிக்கும் அணியே தொடரை வெல்லும் என்பதால் தொடரை தீர்மானிக்கும் போட்டியே அதுதான். எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் இறங்கும். 

கடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றதால், வின்னிங் காம்பினேஷனை மாற்ற வாய்ப்பில்லை. எனவே அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர்.

இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவில் பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய அணிக்கு தற்போதைய ஆடும் லெவன் காம்பினேஷனே ஓகே தான். இந்திய அணி அதீத பேட்டிங் வலுவான அணியாக உள்ளது. ஆனால் பவுலர்களை பொறுத்தமட்டில் சரியாக 5 பவுலர்கள் மட்டுமே உள்ளனர். ஆனாலும் கடைசி டி20 போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். 

மீண்டும் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீச நேர்ந்தால் சுந்தருக்கு பதிலாக ராகுல் டெவாட்டியாவை எடுப்பது பற்றி யோசிக்கலாம். ஆனால் அக்ஸர் படேலை எடுக்க வாய்ப்பில்லை. இங்கிலாந்து அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இடது கை ஸ்பின்னரான அக்ஸர் படேலுக்கு வாய்ப்பில்லை. ராகுல் டெவாட்டியாவை எடுப்பதும் ரிஸ்க் தான். அந்த ரிஸ்க்கை இந்திய அணி எடுக்கிறதா என்று பார்ப்போம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!