கடைசியில் அந்த லெஜண்டின் உத்தியால்தான் ஸ்மித்தை வீழ்த்த முடிஞ்சுது.. இதுக்குதான் பெரிய மனுஷங்க பேச்சை கேட்கணுங்குறது

By karthikeyan VFirst Published Sep 16, 2019, 4:23 PM IST
Highlights

ஆஷஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்திய ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவது எப்படி என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர். அதில் முன்னாள் லெஜண்ட் வீரர் ஒருவர் சொன்ன ஆலோசனைதான் பலனளித்தது. 

ஆஷஸ் தொடர் இனிதே முடிந்துவிட்டது. கடைசி போட்டியில் வென்றதன் மூலம் 2-2 என தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி.

இந்த ஆஷஸ் தொடர் ஸ்மித், ஆர்ச்சர், கம்மின்ஸ், லபுஷேன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு சிறந்த தொடராக அமைந்தது. குறிப்பாக ஸ்மித்துக்கு இது அபாரமான தொடராக அமைந்தது. ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள் என மொத்தமாக 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலுமே ஸ்மித் தான் ஆட்டநாயகன். 

அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் ஸ்மித். ஸ்மித்தை வீழ்த்துவதே இங்கிலாந்து அணிக்கு இந்த தொடரில் பெரும் போராட்டமாக இருந்தது. ஸ்மித்தை வீழ்த்துவதற்கு வியூகமே இல்லாமல் நிராயுதபாணியாக பந்துவீசினர் இங்கிலாந்து பவுலர்கள். ஒருவேளை திட்டம் வைத்திருந்தாலும் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தவில்லை. 

ஸ்மித்தை வீழ்த்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ச்சர், ஒருமுறை கூட அவரை வீழ்த்தவில்லை. ஸ்மித்தை எப்படி வீழ்த்தலாம் என ரிக்கி பாண்டிங், சங்கக்கரா, ஷேன் வார்னே என பலரும் பல ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். அதில் சங்கக்கராவின் ஆலோசனைதான் பலனளித்திருக்கிறது. லெக் கல்லி பொசிசனில் ஃபீல்டரை வைத்து, லெக் திசையில் மேலும் 2 ஃபீல்டர்களை நிறுத்தி ஃப்ளிக் ஆட வைத்து ஸ்மித்தை வீழ்த்தலாம் என்று சங்கக்கரா கூறியிருந்தார். அதேபோலத்தான் ஸ்மித்தை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். பிராட் ஃபுல் லெந்த்தில் லெக் திசையில் வீசிய பந்தை ஸ்மித் லெக் திசையில் திருப்பிவிட முயன்றார். அதை லெக் கல்லியில் நின்ற ஸ்டோக்ஸ் டைவ் அடித்து பிடித்தார்; ஸ்மித் காலி.
 

click me!