
இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி இழந்தது. எனவே டி20 தொடரிலாவது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இலங்கை அணி.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவனை சனத் ஜெயசூரியா தேர்வு செய்துள்ளார். அணியின் பலமான ஆடும் லெவன் என்று அவர் கருதும் அணியை தேர்வு செய்துள்ளார்.
ஜெயசூரியா தேர்வு செய்த இலங்கை அணி:
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா/ஆஷென் பண்டாரா, தசுன் ஷனாகா, வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்செயா, பிரவீன் ஜெயவிக்ரமா.