#ZIMvsBAN தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20.. ஜிம்பாப்வே வீரர்கள் செம பேட்டிங்..! வங்கதேசத்துக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jul 25, 2021, 6:24 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்து, 194 ரன்கள் என்ற கடினமான இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய தொடரை எளிதாக வென்ற வங்கதேசத்திற்கு டி20 தொடர் அவ்வளவு எளிதாக இல்லை. ஜிம்பாப்வே அணி டி20 தொடரில் வங்கதேசத்திற்கு கடும் சவால் அளித்துவருகிறது.

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி. இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மேருமனி மற்றும் மாதவெரெ இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 63 ரன்களை சேர்த்து கொடுத்தனர். மேருமனி 27 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய மாதவெரெ அரைசதம் அடித்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவருடன் இணைந்து அதிரடியாக ஆடி வெறும் சிக்ஸர்களாக விளாசிய சகாப்வா, 22 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 48 ரன்களை விளாசினார். கேப்டன் ராஸா டக் அவுட்டானார். மையர்ஸ் 23 ரன்களும், ரியான் புரி 31 ரன்களும் அடிக்க, ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது.

வங்கதேச அணி 194 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவருகிறது.
 

click me!