பையன் வேற லெவல் பேட்ஸ்மேன்.. ஆனால் அது ஒண்ணுதான் அவனோட பிரச்னை..! இளம் வீரருக்கு முன்னாள் வீரரின் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Jul 25, 2021, 4:46 PM IST
Highlights

பிரித்வி ஷா மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ள ஆகாஷ் சோப்ரா, அவரது ஒரேயொரு பிரச்னையையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு அதற்கான தீர்வையும் கூறியுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை போல அடுத்த தலைமுறையின் சிறந்த வீரராக பார்க்கப்படும் பிரித்வி ஷா, பயமே இல்லாமல் தனக்கே உரிய பாணியில் அடித்து ஆடி அனைவரையும் கவர்ந்துவருகிறார்.

இடையில் சில காலம் ஃபார்மில் இல்லாமல் இருந்த பிரித்வி ஷா, கடந்த ஐபிஎல் சீசனின் பாதியில், டெல்லி அணியின் ஆடும் லெவனிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்களில் அபாரமாக ஆடி தொடர்ச்சியாக சதங்களை விளாசி பல சாதனைகளையும் படைத்து ஃபார்முக்கு திரும்பினார். அதே ஃபார்மை ஐபிஎல் 14வது சீசனிலும் தொடர்ந்தார்.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்று இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடிவரும் பிரித்வி ஷா, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடினார். முதல் போட்டியில் அதிரடியாக ஆடி 24 பந்தில் 43 ரன்களை விளாசிய பிரித்வி ஷா, 2வது போட்டியில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3வது போட்டியில் நன்றாக ஆடி 49 ரன்கள் அடித்தார்.

பிரித்வி ஷா இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்படும் நிலையில், பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, பிரித்வி ஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அருமையான பேட்ஸ்மேன் அவர். இலங்கைக்கு எதிரான முதல் மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் அருமையாக பேட்டிங் ஆடினார். செம ஃபார்மில் இருக்கும் அவர், மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடுகிறார். அவரது பேட்டிங்கின் சிறப்பு என்னவென்றால், ஃபீல்டர்களுக்கு இடையிலான கேப்பில் அருமையாக பவுண்டரி அடிக்கிறார். நல்ல பேட்ஸ்மேனான அவரது ஒரே பிரச்னை என்னவென்றால், கிடைக்கும் நல்ல தொடக்கங்களை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஆட்டமிழக்கிறார்.

நல்ல தொடக்கம் கிடைக்கும்போது, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும். இளம் வீரர் 100-150 ரன்கள் அடித்து ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் தான், தேர்வாளர்களால் அவரை புறக்கணிக்க முடியாது. எனவே நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!